Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  08-03-2021

இன்றைய தியானம்(Tamil)  08-03-2021

சிறந்த பெண்மணி பெபேயாள் 

“அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.” – நீதி. 31:31

1839ம் ஆண்டு மார்ச் 9ந் தேதி நியூயார்க்கில் வாழ்ந்து வந்த மருத்துவர் வால்டர் தம்பதிக்கு பெபேயாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. சிறந்த பக்தி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் இக்குடும்பத்தார். சிறு வயதிலிருந்தே தேவபக்தியிலும், தேவ அன்பிலும் வளர்ந்து வந்த பெபேயாளுக்கு இளம் வாலிப வயதிலே ஜோசப்நாப் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர் மிகப் பெரிய பணக்காரர்.

மிகவும் பணக்காரராகவும், பிரபலமானவராகவும் இருந்த பெபேயாள் சபையிலும் சமுதாயத்திலும் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமென்ற, பேராவலுடன் ஏழைகள், ஒடுக்கப்பட்ட நலிவுற்றோர் என பலதரப்பட்ட மக்களிடையே மனதார தொண்டாற்றி வந்தார். சர்வதேச சன் ஷைன் என்ற தொண்டு நிறுவனம் ஏழை எளியோர், மனசோர்வுற்ற மக்கள், விதவைகள் வாழ்வை ஒளிரச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெபேயாள், அநேக ஏழைப்பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலரின் வறுமைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வை குளிரச்செய்தார்.

பெபேயாள் நாப் இசைத்துறையிலும் சிறந்து விளங்கி மாலை நேரங்களில் இசைக் கச்சேரியும் நடத்தி வந்தார். அந்நாட்களிலிருந்த பிரபலமான 
பாடல் ஆசிரியர்களின் பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார். சிறந்த பிரசங்கியாளரும் கூட! அத்துடன் பல கிறிஸ்தவ நூல்களையும் எழுதியுள்ளார். ஒருநாள் தன் சபை பாடகியான கண்தெரியாத ஃபேனி கிராஸ்பியைக் காண அவரது இல்லத்துக்குச் சென்றார். என் மனதில் ஒரு இனிய ராகம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நான் வாசிக்கிறேன் நீங்கள் வரிகளை எழுதுங்கள் என்றார். முழங்கால்படியிட்டு ஜெபித்த ஃபேனி “நிச்சயம் இயேசு என் சொந்தமே, இது தெய்வீக மகிமையே” என இந்த இசை சொல்கிறது எனப் பாடலின் முழுவரிகளையும் எழுதி முடித்தார். இது (Blessed assurance Jesus is mine) மிகப் பிரபலமான பாடலாக பாடப்பட்டது. 

எனக்கன்பானவர்களே! நம்மைச் சுற்றிலும் சோர்வுற்ற, நலிவுற்ற, ஏழைகள் மற்றும் தேவையிலுள்ளோர் ஏராளம் உள்ளனர். தேவன் நமக்குத் தந்துள்ள தாலந்துகள், திறமைகள், பணம், நேரங்களைப் பிறருக்கென செலவிடுவோமா? தேவையுள்ளோரின் உள்ளங்களைத் தேற்றி அவர்களை ஒளிரச் செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மையும் சிறந்த பெண்மணிகளாக வாழ கிருபை செய்வாராக! ஆமென். 

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.  
-    Mrs. சரோஜா மோகன்தாஸ்

ஜெபக்குறிப்பு:
ஜெபக் கூடாரம் கட்டுமானப் பணியின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)